Tuesday, June 4, 2013

மே 1

திரைப்படங்கள் வெறுமனே பொழுதுபோக்கோடு நின்றுவிடாது சமூகத்திற்கான பொறுப்புணர்வோடும் செயற்பட வேண்டும் என்ற கருத்தை மறுபடியும் நிரூபித்திருக்கிறது தயாரிப்பில் மொஹமட் பார்ஷன் இயக்கத்தில் வெளியிடப்பட்ட குறுந்திரைப்படம் மே 1.
மே 1 என்றால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் என்ற பொதுவான பார்வைக்கோணத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தொளிலாரர்கள் என்ற வரையறைக்குள்ளே கூட உட்படாத  சிறுவர் தொழிலாளர்களின் நிலை பற்றி நம்மை சிந்திக்க வைக்கும் திரைப்படம் இது .
சிறுவர் தொழிலாளர்களின் வாழ்வியல் ஏக்கங்களையும் மறுக்கப்படும் உரிமைகளையும் இந்திக் என்ற சிறுவனின் வாழ்க்கையினூடு புலப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் .
கதையின் முக்கிய பாத்திரமாக வரும் சிறுவன் அந்த  பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான் .
படத்திற்கு பின்னணி இசை மேலும் பலத்தை சேர்த்துள்ளது . வர்த்தக நோக்கான இசையை விடுத்து இயற்கையோடு இணைந்த வகையில் படம் முழுதும் எம்மோடு பயணிக்கிறது . 
படத்தொகுப்பு ஒளிப்பதிவு வரைகலை என்பனவும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது . 

கருத்தினை சொல்ல மொழி என்பது கட்டாயம் இல்லை .. உணர்வுகளையும்  ஏக்கங்களையும் மொழி இன்றி யாராலும் புரிய  முடியும் என்பதை இத்திரைப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது .

இது போன்ற படைப்புக்கள் மூலம்  சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்பதும் சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதிலும் மாற்று கருத்திற்கு இடம் இல்லை ...

இது போன்ற படைப்புக்களை மேலும் எதிர்பார்க்கின்றோம் 

No comments:

Post a Comment