Sunday, June 24, 2012

சகுனி - என் பார்வையில் ...



பரபரப்பான எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ஷங்கர் தயால் இயக்கத்தில் கார்த்தி, சந்தானம், பிரனிதா நடிப்பில் உருவான சகுனி

ஒரு வரி கதை -மசாலா- பொழுதுபோக்கு இது தான் சகுனி.
பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும்.. எதுவுமே இல்லை என்றும் கூறிவிட முடியாது. அரசியல் பின்புலத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட சாதாரண கதை.
அமைச்சர் சந்திரமோகனின் சாவில் தொடங்கும் கதை பூபதி(பிரகாஷ்ராஜ்) யின் வரவில் சூடு பிடிக்கிறது என்று நினைக்கும் முன்னே கமல்(கார்த்தி) தனது  flashback ஐ அப்பாதுரை -ரஜினி (சந்தானம்) க்கு சொல்வதாக கதை நீள்கிறது. கார்த்தி தனது வீட்டை ரயில்வே subway திட்டத்திலிருந்து மீட்க சென்னை வந்து அரசியல் வாதிகளின் அல்லக்கைகளிட்கே பணத்தை செலவு செய்து வீணானதும், அத்தை ரோஜா வை சந்தித்து அவரின் மகள் ஸ்ரீ தேவி (பிரநிதா) உடன் சந்தோசமாக காலத்தை செலவழிக்க , அத்தையாலும் புறக்கணிக்கபட்டு சந்தானத்தின் ஆட்டோவில் செல்கிறார். தனது வீட்டு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே முகம் தெரிந்த பிரகாஷ் ராஜ் இடம் சென்று பேச அவரால் விரட்டியடிக்கப்பட தொடங்குகிறது சகுனி ஆட்டம் .
இட்லி விற்கும் ரமணி ( ராதிகா)வின் வருகை.. ராதிகாவை கார்த்தி commissioner election ல் பிரகாஷ் ராஜின் ஆசை நாயகிக்கு எதிராக நிறுத்தி வெற்றி காண வைக்கிறார். பின்னர் பிரகாஷ் ராஜை எப்படி பழிவாங்கி தனது வீட்டையும் எப்படி மீட்கிறார் என்பதே மிகுதி கதை.
 சந்தானம் கதையின் முக்கிய பாத்திரம். சந்தானத்தின் comedy வழமை போல பஞ்ச் , timing , என்றும் அப்பாதுரை என்ற தனது முழு பெயரை மறைப்பதும், கார்த்தியை பணக்காரன் என்று நம்பி ஏமாறுவதும் என ஒவ்வொரு இடத்திலும் highlight .
கார்த்தி தனது கதாபாத்திரத்தை ஏற்புடைய வகையில் நடித்துள்ளார். கமல் ரஜினி கூட்டு அரங்கை  சிரிப்பால் அதிர வைத்தது.
ஸ்ரீதேவி யாக வரும் பிரநிதா கொஞ்ச நேரம் மட்டும் வந்து திரையில் நின்று மக்களை காப்பாற்றி விட்டார். தமிழ் சினிமா வின் சட்டப்படி ஒரு heroine தேவை என்று வந்திருக்கிறார்.
படத்தின் முற்பாதி திரைக்கதை சரியாக வடிவமைக்கப்படவில்லை, கதை தொய்கின்றது.  ஒரு சின்ன பழையகதை இ
டைவேளை வரை நீள்வது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைக்கின்றது. இரண்டாம் பாதி கூட சகுனி ஆட்டம் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் அமையவில்லை என்றே கூறலாம். ஆனால் நகைச்சுவைக்கு எங்குமே பஞ்சமில்லாமல் திரைக்கதை கமல் ரஜினியுடன் நீள்வது சிறப்பானது.
படத்துக்கு பின்னணி இசை ஏதோ ஓரளவு கைகொடுத்துள்ளது. வெள்ளை பம்பரம் பாடல் மனதில் நிற்கின்றது.
"வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடிது , தமிழ் பேசுறவன் ஏந்துறது திருவோடு "
என்ற கவிஞர் பரமுவின் வரிகள் சிறப்பாக உள்ளது
கிராமத்து காதல் என்ன எப்போதுமே 'கள்ளி செடியில் பேர் எழுதுறது, ஒண்ணா திரியிறது , முள்ளு குத்த வந்தா கையில தாங்கிறது இதுதானே புதுசா நகரத்துக்கு வாங்க என்கிறது '
அரசியல் நடத்தனும் என்றால் தனியா கட்சிக்கு டிவி சேனல் வைத்திருக்கனும் என்று கார்த்தி சொல்வது படத்தில் ஒரு சிறப்பு.

திரைக்கதையின் தொய்வு படத்தையே தொய்ய விட்டு விட்டது 



சகுனி ஆட்டம் சூடு பிடிக்கவில்லை .

No comments:

Post a Comment